புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்துடன் இணைந்தனர் முன்னாள் போராளிகள் – வவுனியாவில் நிகழ்வு
புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துசமய அமைச்சர் திருவாளர் T.M சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளரின் அணுசரனையுடன் இந்நிகழ்வானது வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதான அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயளாளர் திருவாளர் V. சிவஞனாசோதி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கடந்த 1 வருட காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பேர் இன்று சமுகத்துடன் இணைக்கப்பட்டார்கள். அத்துடன் இவர்கள் 20 பேரும் கணிணி கற்கை நெறியினை முடித்ததற்கான சான்றுதல்களும் வழங்கப்பட்டன. அத்துடன் முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 28 பேருக்கு தண்ணீர் இரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பூந்தோட்டத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கணிணி கற்கை நெறி சான்றிதல்களும் வழங்கப்பட்டன.
தகவலும் படங்களும்- இ.தர்சன்