செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத
மர்மமான நோய்த்தாக்கங்களினால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பில் வடக்கு
மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகளுடன்
கலந்துரையாடலொன்றை அண்மையில் நடாத்தியுள்ளார். இதில் அண்மைக்காலமாக சாவடையும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள்; மர்மான
நோய்தாக்கத்தினால் சாவடைவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பில் வடக்கு டக்கு மாகாண
சகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கடந்தவாரம் கலந்துரையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இவ்வாறாக புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை
செயற்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். மிக
விரைவில் இவ்வாறான விசேட மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார்
விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளோம். கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான
செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படமென அறிவிக்கப்படுமென அந்த செய்திக்குறிப்பில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.