புனர்வாழ்வுபெற்ற பதினோராயிரம் முன்னாள் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டதா?

279

அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற 125 போராளிகள் திடீர் என மரணமடைந்துள்ளனர். இதற்கான காரணம் கண்டறியப்படாவிட்டாலும், தற்பொழுது இதற்கான காரணங்கள் கண்டறியப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காரணம் என்னவென்றால் புனர்வாழ்வுபெற்ற போராளிகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்கள். புனர்வாழ்வுபெறாத போராளிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் சுகதேகியாகவும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். சீனாவிலிருந்தே இவ் ஊசிகள் கொள்வனவு செய்யப்பட்டு போராளிகளுடைய செயற்பாடுகளை செயலிழக்கப்பண்ணும் ஒருவகை ஊசியாகவே இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பல பெண் போராளிகள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளும், ஐ.நா சபை அறிக்கைகளும் தெரிவித்துள்ளன. இப்போராளிகள் தொடர்பில் இக்கூட்டரசாங்கமானது ஏன் அவர்களுக்கான பாதுகாப்பையோ அல்லது உடல் உள ரீதியிலான தாக்கத்திற்கு பதில் கொடுக்கவில்லை. படையனிகளை வழி நடத்திச்செல்லக்கூடிய போராளிகளினுடைய உடல்நிலை ஆரோக்கியமற்றதாக இருக்க முடியாது. அவர்கள் ஒரு கோழைத்தனமானவர்களாகவும் இருக்கமுடியாது. தளபதி, மேஜர், கப்டன் போன்ற தரத்திலுள்ளவர்களும் புனர்வாழ்வு பெற்று பின்னர் மரணமடைந்துள்ளனர். உண்மையில் இது கவலைக்குரிய விடயமே. சரணடைந்த போராளிகளை இவ்வாறு இவர்கள் கோழைத்தனமாகத் தாக்குவதென்பது இனப்படுகொலையின் உச்சத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்போராளிகளுக்கான பிரத்தியேக வதைமுகாம்கள் வன்னியில் நிறுவப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இதனைவிட பழைய போராளிகள் இனம் பிரிக்கப்பட்டு சித்திரவதைசெய்து பலர் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள். போராளிகளை போர் இறுதியிலே சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்துவிட்டு இவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றதும், இவர்கள் மீது விஷ ஊசி பயன்படுத்தியதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டியதொன்று. விடுதலைப்புலிகளுடைய மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணத்தினைக்கூட விசாரிக்கப்பட்டிருந்தால் தமிழினி போன்ற எத்தனையோ போராளிகள் மரணத்திருக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்காது. தமிழின மண்ணை மீட்டெடுக்கும் போராட்டங்களை மேற்கொண்டவர்கள் இந்த விடுதலைப்புலி வீர்கள். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர.;எல.;எப் போன்ற இயக்கங்கள் போன்று காட்டிக்கொடுப்பில் இவர்கள் இறங்கவில்லை. இவர்கள் இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக இருந்து தமிழினத்தை அழித்தது மட்டுமல்லாது இவர்களிடம் கப்பம் கோரியுமிருந்தனர். அவ்வாறு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நடந்து கொள்ளவில்லை. எமது சொந்த உறவுகளை நிம்மதியாக வாழவிடவேண்டும் என்று எத்தனையோ போராளிகள் கரும்புலியாக வெடித்துச் சிதறியுள்ளார்கள். இவர்களுடைய தியாகம் மதிக்கப்படவேண்டும். புனர்வாழ்வு என்ற போர்வையில் புனர்வாழ்வு முகாம்களில் செய்யப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் எமது தினப்புயல் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு போராளிகளுக்கும் நடந்த உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் தினப்புயலிடம் ஆவணங்கள் பதிவாகியுள்ளது. இதனை நாம் பாதுகாப்புக்கருதி வெளியிடவில்லை என்பதனையும் இதில் நாம் சுற்றிக் காட்டவிரும்புகின்றோம். இதனைவிட இரண்டாயிரம் போராளிகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா என்ற ஒரு வீடியோ பதிவினை எமது இணையத்தளத்தில் வெளியிட்டோம். இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் எம்மோடு தொடர்பு கொண்டார்கள். புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கை என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. மாற்றுவலுவுள்ள போராளிகள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கின்றார்கள். ஐநூறுக்குட்பட்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் கூட்டு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்தினைவிட மோசமானவர்களா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? என்று ஆராய்வதற்கான முயற்சியினை வடமாகாண சபையினுடைய அமைச்சர் சத்தியலிங்கம் மேற்கொண்டு வருகின்றார். உண்மையில் தமிழ் மக்களுடைய போராட்டத்தைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படவேண்டும். சவூதி அரேபியாவில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு இந்த ஊசி பயன்படுத்தப்படுகின்றது. மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த ஊசியினுடைய பெயர் வெளியிடப்படும். அதுவரையிலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திந்துச்செயற்படவேண்டும். விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு துரிதகதியில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஒருநேர உணவுக்குக்கூட வழியின்றி சில போராளிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலைமையை நேரில் சென்று கண்டறியவேண்டும். சர்வதேச நாடுகளின் சதியினால் தமிழ் மக்களுடைய போராட்டம் சிதைக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலத்தின் தேவை கருதி இப் போராளிகளுக்கான உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்து இராணுவத்தரப்பால் இவர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக இனங்கண்டு அவர்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களைக் காப்பாற்ற அனைத்து தமிழ் சார்புக்கட்சிகளும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் தமிழினத்தின் எதிர்வரும் தலைமுறைகளும் இவ்வாறு ஏதோவொரு விஷ ஊசிகளின் மூலம் கொல்லப்படுவார்கள். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்கின்றபொழுது அரசாங்கம் கண்களை மூடியே செயற்படும். தற்பொழுது இருக்கக்கூடிய மிகமுக்கியமான பிரச்சினைகளில் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பது ஆராயப்படவேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ் நடவடிக்கைகளை அமுல்படுத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதுவிட்டால் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் காரணத்தைக் கண்டறியாமலே இறந்துபோகநேரிடும்.

ltte_ladisltte-20140430-1

SHARE