புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லையேல் பிற நாட்டுக்கு நாடு கடத்துவதே சிறந்தது.

285

3a39fddb-fb0a-4255-80bd-12bd76ed50bd
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசு தமிழ் மக்கள் கேட்கின்ற ஒற்றுமையைக் கொடுக்கப்போவதில்லை. வடமாகாணசபையில் ஒரு ஆட்சியும், கிழக்கு மாகாணசபையில் மற்றொரு ஆட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றது. சிறுபாண்மை இனத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசாங்கம். இதனால் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முன்னால் போராளிகள் சுதந்திரமாக இந்நாட்டில் வாழமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. கிட்டத்தட்ட புனவர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களால் உங்களுக்குப் பிரச்சனை ஏற்படுமாக இருந்தால் இவர்களை நாடுகடத்துவதில் ஏன் இலங்கையரசு தயங்கவேண்டும். வெளிநாடுகளிலாவது சென்று தமிழீழத்திற்காக போராடிய இப் போராளிகள் நிம்மதியாக உயிர்வாழ முடியும்.

IMG_5407  manikfarm1_CI-1
பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்திற்கு அமைய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதற்கு அதிகாரம் இருந்தும் இவ் அரசாங்கம் கணி பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதிகாரம் இருப்பதைச் செய்யமுடியாத இலங்கை அரசு சமஷ்டி அதிகாரத்தைக் கேட்கும் பொழுது இதனைக் கொடுப்பார்களா? என்றும் அரசாங்கத்திடம் சமஷ்டியைக் கையளித்த வடமாகாணசபை உறுப்பினர்களும், முதலமைச்சரும் சிந்திக்கவேண்டும். படித்த முட்டாள் கூழ்ப்பாணையில் விழுந்த கதைபோல் வடமாகாணசபையினால் கையளிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைமையானது மைத்திரி அரசாங்கத்தினால் விமர்சனைக்குள்ளாக்கப்பட்டு கேளித்தனம் செய்யப்பட்டு வருகின்றது. அடிப்படைப் பிரச்சனைகளை இன்னமும் இந்த அரசு தீர்த்துவைக்கப்படத நிலையில் எந்தொரு தீர்வுத்திட்டமும் தமிழ் மக்களுக்கு சாத்தியமற்றது.
முப்பது வருடகாலப் போராட்டத்தினை இரண்டு அல்லது மூன்று வருடத்தில் முடித்துவிடலாம் என்று அரசியலில் எமது முயற்சிகளை எடுப்பதன் ஊடாக அவை தென்னிலங்கை பேரினவாதத்திற்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட பிரச்சனைகள் பூதாகாரமாக உருவெடுக்கின்றது. கோழியை அறுத்தோமா? சட்டிக்குள் போட்டோமா? என்று எமது அரசியல் காய் நகர்த்தப்படவேண்டும். இதனைவிடுத்து போராட்டம் வெடிக்கும் என்று வீர வசனங்களைப் பேசிக்கொள்வது, வீர வசனங்களைப் பேசி தமிழ் மக்களை உசுப்பேத்துவது இக்கால அரசியலில் சாத்தியமற்றது. போராடிய போராளிகளுக்கே அதனுடைய வலி தெரியும்.
இந்த நாட்டில் அவர்களைச் சுந்திரமாக வாழ விடவேண்டும். இல்லையேல் அவர்கள் நாடு கடத்தப்படவேண்டும். இவ் இரண்டு விடயங்களையும் இவ் அரசு மேற்கொள்ளாது மீண்டுமொரு இனக்கலவரத்தையே இந்நாட்டில் மேற்கொள்வதுக்கு முயற்சி செய்து வருகின்றது. அரசியலில் புது வியூகங்களை மேற்கொண்டு இவ் அரசாங்கத்திற்கு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் முடிவினை மட்டும் அறிவிப்பவர்களாக தமிழினம் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படுவதனால் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதேயாகும்.

SHARE