நேற்று இரவு சரியாக 11 மணியளவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான புனானை பகுதியில் இடம் பெற்ற பாரிய விபத்தில் இருவர் வாழைச்சேனை வைத்திய சாலையில் அதி தீவிர. சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நிந்தவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தும் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கி கோழிகளை ஏற்றி வந்த வட்டாவடி ரக வாகனம் மோதி யே இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .
வட்டாவடி ரக வாகனத்தில் இருந்த கோழிகள் அனைத்தும் உயிர் இழந்து வீதியோரம் முழுவதும் வீசப்பப்பட்டுள்ளதுடன் சாரதியும் உதவியாளரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்
அதி சொகுசு பேருந் து ஓரளவு சேத்துக்கு உட்ப்பட்டு உள்ளதுடன் வடி ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது குறிப்பிட த்தக்கது .
மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸார் மேற் கொள்ளுவதுடன் பேருந்தும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டுள்ளது .