புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
சுய தியாகம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் என்பவற்றின் மகத்துவம் பற்றி புனித ரமழான் மாதம் எமக்கு நினைவூட்டுகின்றது. பல்வேறு இன மற்றும் சமய ரீதியான பின்னணிகளைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் ஐக்கியப்படுவதற்கு இப்புனித மாதத்திலே எமக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
இப்புனித நாளினைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் எமது நாட்டிலே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களை மறக்காமல் இருப்பதற்கும் நாம் உறுதி பூணுவோம். தமது எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றிருக்கும் மக்கள் தமது எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியையும் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிட்டவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
ஈத் முபாரக்!
இரா. சம்பந்தன்
எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கைப் பாராளுமன்றம்
2018.06.14 ஆம் திகதி