புனே அணியிலிருந்து மிட்செல் மார்ஷ் அவுட்

302

ஐபிஎல் தொடரின் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.

Daily_News_7587505578995

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ்.

இந்நிலையில் இவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இடது பக்க வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியிருப்பதாக அவுஸ்திரேலியாவின் மருத்துவ மேலாளர் அலெக்ஸ் கோண்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே அணிக்காக இந்த தொடரில் 3 போட்டிகளில்ஆடிய மார்ஷ், 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஏற்கெனவே கெவின் பீட்டர்சன், டூ பிளஸ்ஸி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE