ஜெயம் ரவி தற்போது புது உற்சாகத்துடன் காணப்படுகிறார், எல்லாம் ரோமியோ ஜுலியட் வெற்றி, அப்பாடக்கர், தனி ஒருவன் படத்தின் ரிலிஸ் தான்.
இந்த வாரம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க, செம்ம பொழுதுப்போக்கு படமாக வெளிவரும் படம் தான் சகலகலா வல்லவன் அப்பாடக்கர்.
இதற்கு முன் ரவி நிமிர்ந்து நில் என்ற புரட்சிகரமான படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து இளைஞர்கள் மனதை கவரும் காதல் படமான ரோமியோ ஜுலியட் படத்தில் நடித்தார், தற்போது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படி மாஸ் ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் படம் தான் சகலகலா வல்லவன் அப்பாடக்கர். கண்டிப்பாக இந்த படமும் ரவிக்கு நல்ல வெற்றியை தர வேண்டும் என சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.