புராதன கல்வெட்டு மீட்பு

246

அநுராதபுரம்-தந்திரிமலை பிரதேச கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து புராதன கல்வெட்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்வெட்டு தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த கல்வெட்டு தொடர்பில் மேலதிக பரிசோதனைகளுக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இருவர் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.எம்.பீ.ஜே.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது தேவைகளுக்காக வீட்டினுள்ளே ஒரு பகுதியை தோண்டும் போது குறித்த கல்வெட்டு காணப்பட்டதாகவும், உடனடியாக இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவித்ததாகவும் குறித்த கல்வெட்டு மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

SHARE