ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ள புராதன தளங்களை புதுப்பொலிவுடன் மீட்டெடுக்க சிரியா அரசு முடிவு செய்துள்ளது.சிரியாவின் மிக புராதன தளமாக விளங்கிய Palmyra பகுதி ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இதுவரை இருந்து வந்தது.
கூட்டுப்படைகளின் தொடர் நடவடிக்கையின் பலனாக தற்போது அந்த பகுதி சிரியா படைகளின் வசம் திரும்ப வந்துள்ளது. ஐ.எஸ்.அமைப்பினரின் அதிகாரத்தின் கீழ் இருந்த போது Palmyra பகுதியில் அமைந்துள்ள புராதன சின்னங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்து வந்தனர். இதனால் உலக அரங்கில் கவனிக்கப்பட்டு வந்த இப்பகுதி சிதைந்து அதன் புகழை இழந்து காணப்பட்டது. தற்போது கூட்டுப்படைகளுடன் இணைந்து சிரியா ராணுவம் இப்பகுதியை மீட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியை புதுப்பிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு UNESCO அமைப்பின் அனுமதி கோரியுள்ளதாகவும், அவர்களின் அனுமதி கிடைக்கப்பெற்றதுடன் அடுத்த 5 ஆண்டுகளில் சீரமைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். |