புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன்

231

சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர வைத்து பாடம் நடத்தி வந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தென்கிழக்கு சீனாவை சேர்ந்த சௌ ஜியாஜோவ் என்ற 13 வயது சிறுவன் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

சிறுவனை நெருக்கமாக வைத்து கவனித்துக்கொள்ள ஆசைப்பட்ட பெற்றோர் உள்ளூரில் உள்ள ஒரு பள்ளியிலே சேர்த்து விட்டுள்ளனர்.

அங்கு புற்றுநோய் மற்ற மாணவர்களுக்கும் பரவி விடும் என நினைத்த ஆசிரியை, ஜியாஜோவை மட்டும் சக மாணவர்களிடம் இருந்து பிரித்து தனியே அமர வைத்துள்ளார்.

பள்ளி தேர்வு நாளில், ஜியாஜோவ் மட்டும் தனிமையில் இருந்ததால், மனமுடைந்து சரியாக தேர்வெழுதாமல் வீட்டிற்கு திரும்பியுள்ளான்.

அதோடு நில்லாமல் தொடர்ந்து 3 தேர்வுகளுக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த ஜியாஜோவின் தந்தை சவ், நடந்தவை பற்றி கேட்டறிந்த பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதைபற்றி கேட்டு பள்ளி நிர்வாகத்தில் சண்டையிட்டால் தன்னுடைய குடும்பம் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடும் என நினைத்த சவ், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE