பிரித்தானியாவில் 25 புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறப்புக்கு மருத்துவர்கள் நாள் குறித்த நிலையில் தற்போது அப்பெண்ணுக்கு நோய் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போயுள்ளது.
Cheshire கவுண்டியை சேர்ந்தவர் டேவிட். இவர் மனைவி ஹீடி. தம்பதிக்கு வில்லியம் (7) மற்றும் லீவிஸ் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்தாண்டு லீவிஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதும் அது மூளைக்கு பரவியதும் தெரியவந்தது.
மொத்தம் 25 புற்றுநோய் கட்டிகள் ஹீடி உடலில் உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஹீடி இன்னும் 6 மாதம் தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கெடு கொடுத்தனர்.
ஆனால் மனம் தளராத ஹீடி இணையத்தின் உதவியை நாடினார்.
தனது நோய்க்கு எங்கு தீர்வு கிடைக்கும் என தேடிய நிலையில் மான்செஸ்டரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீர்வு கிடைக்கும் என தெரியவந்தது.
அந்த மருத்துவமனையில் தான் பிரபல நடிகர்களான கரோலின் அஹிரின், சாலி டயனிவோர் போன்றோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
அங்கு ஹீடிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நோய் பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்தாண்டு அவருக்கு எடுத்த ஸ்கேனில் கட்டிகள் பல தென்பட்ட நிலையில் இந்தாண்டு எடுக்கப்பட்ட ஸ்கேனில் கட்டிகளே இல்லாமல் இருந்தது.
அதாவது நோய் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போனது.
ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என கூறப்பட்ட ஹீடி தனது சொந்த முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மீண்டும் புதிய வாழ்க்கையை தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து பேசிய ஹீடிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மேத்யூஸ், நோயாளிகளுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன், அதாவது எல்லா நோயாளிகளும் ஹீடி பயனடைந்தது போல பயனடைய மாட்டார்கள் என கூறியுள்ளார்.