புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

233

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

மனித குலத்தை ஆக்கிரமித்து வரும் கொடிய நோயாக புற்றுநோய் காணப்படுகின்றது.

எனினும் இந்நோயை முற்றாகக் குணப்படுத்தக்கூடிய எந்தவொரு மருத்துவ முறையும் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் விஞ்ஞானிகளோ ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் பயனாக தற்போது ஒரு நிவாரணி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

IMM-101 எனும் குறித்த மருந்தானது மனித நிர்ப்பீடனத் தொகுதியினை தூண்டிவிடுவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிராக போராட செய்கின்றது.

இதனை லண்டனிலுள்ள சென்.ஜோர்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆய்விற்காக 110 வரையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ் ஆய்வு காலமானது முன்னர் 4.4 மாதங்களாக வரையறுக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் 8 மாதங்களாக நீடிக்கப்பட்டிருந்தது.

இதற்கு காரணமாக கணைய புற்றுநோயானது ஒரு வருடங்களின் பின்னரும் நோயாளியில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE