புற்றுநோய் மருந்து விலைகள் மேலும் குறையும்

177

விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என்று சுகாதார போஷக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றி அமைச்சர் இந்த மருந்து வகைகளின் விலை இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக இருந்தது. அரசாங்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை குறைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இரு புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் இலங்கையில் இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் சுகாதார போஷக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்

SHARE