புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சாந்தனின் மரணம்

83

 

சாந்தனுடைய மரணமானது இந்திய புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்திய புலனாய்வாளர்களின் நோட்டமிடல் தற்போது அதிகரித்துள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழர் பகுதியின் செயற்பாடுகளை புலனாய்வாளர்கள் ஊடாக இந்தியா கவனித்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் மக்களின் நிலைமையை இந்தியாவால் மாற்ற முடியவில்லை. மாற்றவும் முடியாது என்பதை சாந்தனின் இறுதி ஊர்வலம் தெளிவாகக் காட்டியிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய புலனாய்வுத் துறை சாந்தனிடம் கூறிய இறுதித் தகவல்கள் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

SHARE