முல்லைத்தீவில் உள்ள ஐந்து பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர்.
முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தார்.
கடந்த 2015.12.03ம் நாளன்று மு/இரணைப்பாலை றோ.க.மகா வித்தியாலயம், மு/அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயத்திலும் 2015.12.05ம் நாளன்று மு/குமுளமுனை மகா வித்தியாலயம், மு/ஆறுமுகம் வித்தியாலயம், மு/ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை அப்பாடசாலை சமூகம் சிறப்பித்துள்ளது.
பாடசாலை முதல்வர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் முல்லை. கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள இப்பாடசாலைகளில் இம்மாணவர்களின் முயற்சிக்கு வித்திட்ட ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் உரையாற்றிய அனைவரும் பாராட்டினார்கள்