புலமைப் பரிசில் கருத்தரங்குக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றம்

201
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த புலைமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (03) ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
  
குறித்த தனியார் நிறுவனத்தின் அகரம் கல்வி பணித்திட்டத்தினூடாக வடமாகாணத்தில் நடைபெற்றுவரும் புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்விற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியா, செட்டிக்குளம், பாவற்குளம் மற்றும் ஆண்டியா புளியங்குளம் போன்ற தூரப்பிரதேதங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களும், பெற்றோரும் விசனத்துடன் திரும்பிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
புலைமைப்பரிசில் கருத்தரங்கு நடத்தும் குறித்த நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
08-05-2018 வடக்கு கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியிருந்த குறிப்பிட்ட ஊடகநிறுவனம் 30-05-2018 வவுனியா தெற்கு கல்வி வலயத்தினூடாக அனைத்து பாடசாலைகளுக்கும் 03-06-2018 புலைமைப்பரிசில் கருத்தரங்கு நடைபெறுமென அறிவித்தல் வழங்கியுள்ளது.
கல்வி கருத்தரங்கு நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளுக்கு வவுனியா தெற்கு கல்வி வலயமோ, குறித்த ஊடக நிறுவனமோ அறிவித்தல் எதனையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE