புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி

237

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலான முதல் அங்கமாக புலம்பெயர்வு எனும் தலைப்பிலான கண்காட்சி ஒன்று எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு புனித அந்தோனியார் வீதியலுள்ள புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மட்டக்களப்பு காரியாலயத்தில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பான புலம்பெயர்வு, புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் செயற்பாடுகள், புலம்பெயர்ந்துள்ளவர்களின் அனுபவங்கள் சம்பந்தமான புகைப்படங்கள், ஓவியங்கள், புலம்பெயர்வு சம்பந்தமான குறும்பங்கள், வீடியோக்கட்சிகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வினையும் அறிவினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் கண்காட்சியாக அமைந்துள்ள இக் கண்காட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி கொழும்பிலும், கிளிநொச்சியில் கடந்த 5ஆம் திகதியும் நடைபெற்றிருந்ததுடன், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 139 ஆலய வீதியிலும் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போதும்கூட அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் படகுகள் மூலமும், விமானம், தரை வழி போன்றவற்றினாலும் சட்டவிரோதமான புலம்பெயர்வுகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்ற நிலையில் இந்த புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றமை முக்கியமானதாகும்.

unnamed (13)

unnamed (12)

 

SHARE