புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து அன்பர் ஒருவரின் பங்களிப்பில் பதினொரு குடும்பங்களுக்கு தற்காலிக வாழ்வுடைமை உதவுபொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உதவிகளானவை கடந்த 2016.07.27ஆம் நாளன்று ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இவ்வுதவித்திட்டத்தில் அகப்பை செய்து விற்கும் ஒருவருக்கு அதற்கான உபகரணங்களும், ஒரு குடும்பத்திற்கு சிறிய குழந்தைக்காக பால்மா பெட்டிகளும், ஏனைய குடும்பங்களுக்கு அரிசி, சீனி என்பனவும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், இவ்வுதவிகளுக்கான பங்களிப்பை வழங்கிய அவுத்திரேலியா வாழ் புலம்பெயர் உறவு, அன்பர் திரு. குபேரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


