புலம்பெயர் நாடுகளில் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

229

கடந்த தசாப்தத்தில் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய ஆண்டுகளை விடவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு 95 கோரிக்கைகள் அதிகமாக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஆண்டு 131 வெற்றிகரமான விண்ணப்பங்களின் ஐந்தில் ஒன்றில் சீனாவில் இருந்து வந்த விண்ணப்பமாகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புகலிடம் கோருவோர் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் இருந்து வருகின்றது.

இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் பாக்கிஸ்தானுக்கு அடுத்தபடியாக பீஜி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

சராசரியாக, ஒரு காலாண்டில் 3000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் 2007 ஆம் 834 விண்ணப்பங்கள் வெற்றிரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் சர்வதேச குடியேறுதல் தகவல்களுக்கமைய 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நியூசிலாந்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதே காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் 124 வீதம் அதிகரித்துள்ளது. 15,000 முதல் 27,000 வரை புகலிட கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE