புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதம்

148

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களில் சிலருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு விசா கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த திட்டத்தால் பயனடைய உள்ளவர்களுக்கு இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE