எங்களுடைய வரலாற்றில் 1989 இலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இந்திய இராணுவத்தின் காலத்திலிருந்தே அவர் மரணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.
தங்களுக்கு தேவையான காலப்பகுதிகளில் அவருக்கு உயிரோட்டம் கொடுப்பதையும் தேவையற்ற காலத்தில் அவரைக் கொல்லுவதுமான செயற்பாட்டை கடந்த காலங்களில் பல நாடுகளின் உளவுப் பிரிவும் இராணுவப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.