புலிகளின் முக்கியஸ்தர் மனைவி பிள்ளைகள் ஆறு ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்…! யாழில் பரபரப்பு….

308

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

11227391_184953931842422_4729004812771827630_n

புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த புலனாய்வுத்துறை விநாயகம் என்பவர் வரணியை சொந்தஇடமாகவும் பின்னர் வட்டக்கச்சியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர். விநாயகம் என்பவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டாதாக கூறப்பட்டது.

இதன் பின்னர் அவரது மனைவி பிள்ளைகள் யுத்தம் முடிந்து வெளியே வந்த போது காணாமல் போயிருந்தனர். கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்த இவர்களுக்கு என்ன நடந்தது எங்கே உள்ளனர். என்பது இதுவரை தெரியாமலே இருந்து வந்தது. நேற்றைய தினம் இனந்தெரியாத சில நபர்களால் இவர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு நேற்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியதொடு ஆறு வருடங்களாக காணமல் போனவர்கள் திடீரென வந்தமையால் ஆச்சரியமும் காணப்பட்டது. இதுவரை காலமும் விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடற்படையினரின் தங்குமிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE