தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த எவரும் இலக்கு வைக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெஹலியகொடவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸவோ தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்காக இலக்கு வைக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த எவரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.