புலிகள் ஆயுதம் வாங்க சர்வதேச நாடுகள் 133 கோடி ரூபா வழங்கின.

297

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக, ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப் புலிகளுக்கு சுமார் 133 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, 12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த இணைந்து இந்த பணத்தினைக் கொடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், புலிகளின் முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றில் இந்த விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, நோர்வே, நியூசிலாந்து இத்தாலி, பொஸ்ட்வானா, மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

SHARE