ராஜபக்சே அரசால், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளனர். அதன்படி 8 அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணசேனன ஹெற்றியாராச்சி அரசிதழில் வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதருமான சமந்தா பவர் இலங்கைக்கு வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழர் தேசியசபை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய சபை ஆகிய 8 அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் இணைப்பு குழு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமை செயலக குழு மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள 155 தனி நபரில் 22 பேர் கனடாவிலும், டென்மார்க்கில் 17 பேரும், இலங்கையில் 14 பேரும், இங்கிலாந்தில் 12 பேரும், நெதர்லாந்தில் 12 பேரும், பிரான்சில் 11 பேரும், ஜெர்மனியில் 8 பேரும், இந்தியாவில் 7 பேரும், இத்தாலியில் 4 பேரும், மலேசியாவில் 3 பேரும், நார்வேயில் 2 பேரும், அமெரிக்கா, தாய்லாந்தில் தலா ஒருவரும் வசிக்கின்றனர். இப்பட்டியலில் 2 சிங்களர்களும் இடம் பெற்றுள்ளனர்.
புலிகள் என மகிந்த அரசால் குற்றம் சாட்டப்பட்ட சிலர் சுமந்திரனுடன் மிக நெருக்கமான அமைப்பு மற்றும் தனி நபர்களே இவர்களே இலங்கை அரசின் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களாவர். இதற்கு வேறு காரணங்களை சிலர் கூற முற்பட்டாலும் ஐ.நாவில் சுமந்திரனின் கருத்திற்கு தலை அசைத்தவர்கள் மற்றும் சுமந்திரனின் வெளிநாட்டு பயணங்களுக்கு உதவி செய்பவர்கள் என பல வகையில் இவர்கள் உள்ளடங்குவர் எனக் குறிப்பிட்டுள்ள எமது ஜே.வி.பி செய்தியின் புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது….
புலம் பெயர் தமிழர்களின் பலமான டயஸ்போராக்களின் கட்டமைப்பை சுமந்திரனை வைத்து இலங்கையின் பிரதமர் ரணில் மிக நிதானமாக இரண்டாக பிரித்துள்ளதாகவும் தமிழர்களின் ஈழம் தனி நாடு எல்லாம் வெறும் கனவு இதை தமிழர்கள் அடைவதை தென்னிலங்கை விரும்பாது என்பதுடன் தமிழரை வைத்தே அதன் வலிமையை குறைக்கும் என்பதில் மாற்றம் இல்லை என அவர் அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.