புலிப் போராளிகளுக்கு விஷ ஊசி நிரூபிக்குமாறு சவால்!

229
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளி வரும் தகவல்களை மறுப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்து ள்ளார்.
மேலும் ஒரு தரப்பினரால் மாத்திரம் முன்வைக்கப்படும் குறித்த குற்றச்சாட்டானது உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்கள் அதனை நிரூபிக்குமாறும் தான் சவால் விடுவ தாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபை மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைக்கும் குறித்த குற்றச்சாட்டினால் பாதிக்கப்ப டப்போவது புனர்வாழ்வு பெற்றுள்ள புலி உறுப்பினர்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்கள் 12,000 என்றும் குறித்த அனைவரும் தற்போது பரப்பப்பட்டு வரும் விஷ ஊசி விடயத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE