புலி திரைப்படத்தை பார்க்க ஆவலாய் இருக்கும் ராஜபக்சே மகன்

313

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் தலைவரான ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினராகவும் இருப்பவர் நாமல் ராஜபக்சே.

நேற்று தனது ஃபேஸ்புக் மூலமாக தனக்கு வந்த கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். இந்நிலையில் ஒருவர் புலி படத்தை பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு நாமல் ராஜபக்சே நான் விஜய்யின் தீவிர ரசிகன். மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள புலி படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளேன் என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஒருவர் புலி படத்தை பார்க்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக கொஞ்சம் காத்திருந்து வேதாளம் படத்தினை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

SHARE