வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு மது போதையில் பொல்லுகளுடன் சென்ற இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், கடமையில் இருந்த ஊழியரொருவர் மீதும் இதன்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூந்தோட்டம் பகுதியிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்குள் மது போதையில் நுழைந்துள்ளனர்.
பொல்லுகளுடன் சென்ற இவர்கள் பிறந்தநாள் கொண்டாடப்போவதாக தெரிவித்து பூங்காவிற்குள் வைத்து மது அருந்த முற்பட்டுள்ளனர்.
சிறுவர் பூங்காவில் மது அருந்த முடியாது என கூறி அவர்களை ஊழியர்கள் வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது மதுபோதையில் இருந்த குறித்த இளைஞர்கள் அங்கு கடமையில் இருந்த ஊழியரொருவர் மீதும் அங்கு நின்று கொண்டிருந்த இருவர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.