பூங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவின் பின் கொலை இராணுவத்தின் செயலா?

374

 

பூங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவின் பின் கொலை இராணுவத்தின் செயலா?

11254564_465349560299836_8485807531991842523_n 11255222_465349493633176_4970100153377496685_n 11159530_465349510299841_4495878284696681693_n

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர வகுப்பு மாணவி நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் இன்றைய தினம் குறித்த மாணவியின் சடலம் கை,கால்கள் மரக்கட்டைகளால் இழுத்து கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிங்கள இராணுவம் நிறைந்த இடத்தில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவுப்பகுதிகளில் சிங்களப்படைகளால் மற்றும் தீவுப்பகுதி ஒட்டுக்கழுக்களாலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றது குறிப்பிடதக்கது

இந்நிலையில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE