பூஜையே போடவில்லை, அதற்குள் ரஜினி படத்திற்கு வந்த எதிர்ப்பு

318

சமீப காலமாக தமிழ் சினிமாவில் எதற்கெல்லாம் தடை விதிப்பார்கள் என்று தெரியவில்லை. இதுநாள் வரை இந்த தடை விவகாரத்தில் கமல் தான் சிக்கித்தவித்தார்.

தற்போது ரஜினியும் இதில் மாட்டிக்கொண்டார், ஒரு சில தினங்களுக்கு முன் கன்னட தயாரிப்பாளர் ஒருவர் ரஜினியுடன் இணைந்து திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவிருக்கின்றேன் என கூறினார்.

ஆனால், அதற்குள் ஹிந்து முன்னணியினர் திப்பு சுல்தான் ஹிந்துக்களை கொன்றவர், அவர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க கூடாது என கொடிப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

SHARE