பூநகரில் இராணுவத்திற்காய் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக நாளை போராட்டம்

309

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காட்டுப் பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலப்பகுதியை கடந்த 2ஆம் திகதி இராணுவத்தினர் அபகரிப்பதற்காய் சுவீகரிப்பு செய்ய இருந்தநிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டது.

SHARE