பூநகரி பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது

298

பூநகரி தெளிகரைப்பகுதியில் 56 ரக துப்பாக்கியின் ரவைகள் 7 மற்றும் வெங்காய வெடி எனப்படும் மிருகங்களை வேட்டையாடும் வெடிப்பந்து 3 என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்ததே குறித்த சந்தேகநபர் இன்று காலை கைது செய்யபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பூநகரி தெளிகரையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என்றும் இவர் ரவைகளை பயன்படுத்தி வேட்டையாடி இருக்கலாம் எனவும்  பூநகரி பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE