உலகில் பலமிக்க நாடுகள் இடையில் விண்வெளியை வெல்வது தொடர்பில் கடும் போட்டி நிலவுகிறது.
ரஷ்யா முதலில் விண்வெளி தடம்பதித்ததுடன் அமெரிக்கா முதலில் நிலவை வென்றது என்பது இரகசியமான விடயமல்ல.
எனினும் நாட்டில் வாழும் மக்களை உலகிற்கு வெளியில் அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு நாடு ஈடுபட்டுள்ளது என்பதை நம்ப முடியுமா?
நம்புவது கடினமாயினும் அது உண்மைதான், அந்த நாடு வேறு எந்த நாடும் அல்ல, அமெரிக்கா தான்.
வொஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பென்டகன் என்ற அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் விண்வெளி தொடர்பான உப செயலாளர் Winston Beauchap அமெரிக்க மக்களை பூமிக்கு வெளியில் கொண்டு செல்ல அமெரிக்க திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார்.
உலகில் தற்போது காணப்படும் நிலைமைகளில் பூமியை கைவிட்டு வேறு ஒரு வாசஸ்த்தலத்தை தெரிவு செய்ய அமெரிக்க தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் தற்போது காணப்படும் ஸ்திரமற்ற நிலை மற்றும் ஒழுக்கமற்ற அரசியல் முறை தொடர்பில் அமெரிக்கா கவலையில் இருந்து வருகிறது எனவும் உப செயலாளர் கூறியுள்ளார்.
அதேவேளை பூமியை சுற்றி பயணித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான செய்மதிகளின் உடைந்து போன பாகங்கள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது. இந்த விண்வெளியில் பயணிக்கும் விண் பொருட்கள் பூமியை அழிவான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் பூமியை சுற்றியுள்ள செயற்கை செய்மதிகளின் உடைந்த பாகங்கள் காரணமாக மனிதன் வேறு உலகத்தை தேடும் முயற்சிக்கு தடையேற்படும் என தெரியவந்துள்ளது.
அதேவேளை இங்கு உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் விண்வெளிப் பிரிவின் பொறுப்பதிகாரி ரியர் அத்மிரல் பிரையன் பிரவுண், அமெரிக்காவின் பல்வேறு துறைகள் புதிய இருப்பிடத்தை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள உப செயலாளர் Winston Beauchap, செய்மதிகளை கணக்கிடுவதில் பல தவறுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான தகவல்களின் படி பூமிக்கு அருகில் மனிதன் வாழக் கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூமியில் தற்போது காணப்படும் நிலைமையில் எந்த நாடாவது அமெரிக்காவின் செய்மதிகளை தாக்கி அழித்தால், அமெரிக்கா செயலிழந்து பெரிய அழிவு ஏற்படும் என உப செயலாளர் Winston Beauchap தெரிவித்துள்ளார்.
உலகில் வாழும் அதியுயர் புத்திசாலி எனக் கருதப்படும். ஸ்டீபன் ஹாக்கின் அண்மையில் வெளியிட்ட கண்டுபிடிப்பையும் அவர் இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.
இன்னும் ஆயிரம் வருடங்களில் பூமியில் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என தான் நம்பவில்லை என ஸ்டீபன் ஹாக்கின் கூறியிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்கர்களை வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி கொண்டு செல்லும் கடும் தேவையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என உப செயலாளர் Winston Beauchap மேலும் கூறியுள்ளார்.