வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் பொலிஸாரினால் சாளம்பைக்குளம் பகுதியில் வைத்து மூன்று இலட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சாளம்பைக்குளம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் 10 அடி நீளமான 21 முதுரை மரகுற்றிகள் ஏற்றப்பட்டு மணல், சிறு கற்களால் மூடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், மரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் எம்மால் கைப்பற்றப்பட்டதுடன் வாகன சாரதியினையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி வசந்த விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பூவரசங்குளம் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.ராஜகுரு தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் 3681 பிரேமதிலக்க (3681), பொலிஸ் கன்சபிள் சரிக் (81176) குழுவினரால் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.