உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் தொடரில் 20 வயதுப் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆர்.ராகவி கிண்ணம் வென்றார்.
மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆர்.ராகவியை எதிர்த்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.அபிசாளினி மோதினார்.
மூன்று செற்களைக் கொண்ட இந்த ஆட்டத்தில் 21:19, 21:18 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று நேர் செற் கணக்கில் கிண்ணம் வென்றார் ராகவி.