பெண்களால் கொல்லப்பட்ட கிம் ஜோங் நாம்: வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

220

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசியா பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் உட்பட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐப்பான் தொலைகாட்சி ஒன்று கிம் ஜோங் நாம் கொல்லப்படும் சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது.

அதில், விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம்யிடம் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, திடீரென வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் நாமின் பின்புறத்திலிருந்து வாய்க்குள் எதையே வைத்து திணிக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண் சாதாரணமாக அந்த இடத்தை விட்டு தப்பி செல்கிறார். குறித்த பெண் தற்போது மலேசியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், ஐப்பான் தொலைக்காட்சி எப்படி இந்த சிசிடிவி காட்சி கிடைத்தது என்பது கேள்வி குறியாக உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE