கழுவிய மற்றும் கழுவப்படாத, பெண்களின் உள்ளாடைகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய இரண்டு மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவரே, முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வயரிங் செய்பவர் போல தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர், சுமார் 14 வீடுகளில் இவ்வாறு உள்ளாடைகளை களவெடுத்துள்ளார்.