பெண்களின் ஒவ்வொரு செயலும் ரகசிய குட்டி கேமிரா படம்பிடிக்கப்படுகின்றன-எச்சரிக்கை

269

 

 

பெண்களின் ஒவ்வொரு செயலும் படம்பிடிக்கப்படுகின்றன. அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது மட்டுமில்லை. குனிந்து தரையை துடைப்பது, துணி துவைப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது.. போன்ற ஒவ்வொன்றும் படமாக்கப்படுகிறது. ஓட்டல் அறைகளில், துணிக்கடையில் உடையை அணிந்து சரிபார்க்கும் அறையில், ஓட்டல் கழிப்பிடங்களில், பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அதற்காக ரகசிய குட்டி கேமிராக்களை பொருத்திவைத்திருக்கிறார்கள்.

அவைகள் படம்பிடிக்கும் அந்தரங்க காட்சிகளை இணையதளத்தில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் நீங்களே இணையதளங்களில் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான தோழிகள் படமோ, ஏன் உங்கள் படமோகூட இருக்கலாம். இந்திய பெண்கள் சமூகத்தில் இது ஒரு புதிய கலாசார சிக்கலை தோற்றிவித்திருக்கிறது.
முன்பெல்லாம் பாதுகாப்பு நலன் கருதி வங்கிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ரகசிய கேமிராக்களை வைத்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இதை பெண்களின் அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
அங்கே பதிவு செய்யப்படும் காட்சிகளில் பெண்களின் அந்தரங்கம் தொடர்புடையவைகளை மட்டும் அடுத்த நாளே யூடீப் போன்ற ‘வீடியோ ஷேரிங் சைட்’களில் போட்டுவிடுகிறார்கள். அதை உலகம் முழுவதும் உள்ள ‘செக்ஸ் ஊனம்கொண்ட ஆண்கள்’ பார்க்கிறார்கள். சிலர் பார்த்து ரசித்த வீடியோக்களை பேஸ் புக்கிலோ, கூகுள் பிளஸ்சிலோ பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஆபாச நீலப் படங்களை பார்த்து ரசித்து அலுத்துப்போன பல செக்ஸ் ஊன மனிதர்கள் இப்போது, இத்தகைய யதார்த்த அரைகுறை காட்சிகளை பார்ப்பதிலே அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவைகளை பார்த்துவிட்டு, ‘யதார்த்த காட்சிகள்’ என்று மெய்சிலிர்த்து பேசுகிறார்கள். அந்தரங்கங்களை படம்பிடிக்க இப்போது குட்டிக்குட்டி கேமிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
அதனை சுவர்கடிகாரம், வாட்ச், பேனா, டை போன்றவைகளில் எல்லாம் பொருத்திக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ பிரேம், குளிர்பான பாட்டில்கள், கண்ணாடி, சூயிங்கம் பாக்கெட் போன்றவைகளில்கூட அந்த குட்டி கேமிராக்களை ஒட்டி வைத்துக்கொள்ளலாம்
SHARE