
பிரான்ஸ் நாட்டில் குட்டை பாவாடை அணிந்துக்கொண்டு வரும் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என இரவு விடுதி வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள Saint-Laurent-du-Var நகரில் L’Annexe என்ற இரவு விடுதி இயங்கி வருகிறது. பெண்களை அதிகளவில் கவருவதற்காக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 25 செ.மீ நீளத்தில் குட்டை பாவாடையுடன் வரும் பெண்களுக்கு இரவு விடுதியில் அனுமதி இலவசம்.
18 முதல் 23 செ.மீ நீளத்திற்கு பாவாடை அணிந்து வரும் பெண்களுக்கு முதல் முறை இலவசமாக மது அளிக்கப்படும்.
18 செ.மீ கீழ் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு இலவசமாக ஒயின் பாட்டில் அளிக்கப்படும். இந்த சலுகை நள்ளிரவு 2.30 மணிக்கு மேல் வழங்கப்பட மாட்டாது.
மேலும், லெக்கின்ஸ் மற்றும் இதர ஆடைகளை அணிந்து அதற்கு மேல் குட்டை பாவாடை அணிந்தால் இச்சலுகைகள் கிடைக்காது’ என அந்த இரவு விடுதி அறிவித்துள்ளது.
இரவு மது விடுதியின் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பெரும் சர்ச்சை கிளம்பி வருகிறது. பெண்களை போதை பொருளாக எண்ணி இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் இரவு விடுதியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நிகழ அதிகளவில் வாய்ப்புள்ளதாக சில பெண்கள் நல அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.