பெண்களை இழிவுபடுத்திய ஆடி கார் விளம்பரம் – சீனர்கள்

204

சீனாவில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆடி கார் விளம்பரத்தினால் அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

ஜேர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி உலகளவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் வெளியாகியுள்ள ஆடி கார் விளம்பரம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் போது திடீரென மணமேடையில் நுழையும் மணமகனின் தாய், இது பயன்படுத்திய கார் என்பது தானா என கண்டறியும் சோதனை செய்வது போல் மணப்பெண்ணின் மூக்கு, காது மற்றும் பற்களை பிடித்து இழுத்து சோதனை செய்கிறார்.

பின், திரும்பி செல்லும் அவர் இறுதியில் தரமானது என தெரிவித்து ஒரு முக்கியமான முடிவினை கவனமாக எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இந்த விளம்பரம் பெண்களை இழிவுப்படுத்துவது போல் பாலியல் பாகுபாட்டுடன் இருப்பதாக ஆயிரக்கணக்கான இணையப் பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், ஆடியை புறக்கணிக்க வேண்டும் என சிலர் கோரியுள்ளனர்.

இது குறித்து ஆடி செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, சீனாவில், ஆடி காரை விளம்பரப்படுத்துவது உள்ளூர் கூட்டு பங்குதாரரின் பொறுப்பு என கூறியுள்ளார்.

SHARE