இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கடுமையாக பதிக்கபட்டுள்ள மாவட்டம். பெண் தலைமைத்துவத்தை அதிகமாக கொண்ட மாவட்டமாகவும், வறுமையில் முதன் நிலை மாவட்டமாகவும் இந்த மாவட்ட உள்ளது. இவ்வாறான சூழலில் பல்வேறுபட்ட உதவிகளை பெற்று குறிப்பாக துறைசார்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களின் ஊடாகவும், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாகவும் கிடைக்கின்ற நிதி உதவிகளைக் கொண்டு ஒரு குழுவாகவும், தனிப்பட்ட நபர்கள் ஊடாகவும் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஏற்ற தொழில்துறைகளை அடையாளம் கண்டு தொழில் முயற்சிகளை செய்வதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றேன்.
குறிப்பாக பல வகையான தையல் பயிற்சிகள், வாழ்வாதார உதவித்திட்டங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றை குழு முயற்சிக்காகவும் தனி நபர்கள் முயற்சிக்காவும் நிதிகளை வழங்கி அவர்களை பலப்படுத்தி வருகின்றேன். இவ்வாறு பலப்படுத்துவதன் மூலம் ஒரு குழு பல குழுக்களை உருவாக்குவதும் தனிநபர்கள் இன்னும் பல தனி நபர்களை உருவாக்குவதும் என பல திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றேன். இதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று மக்களையும், கிராம அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன்.
மேலும் தொழிற் முயற்றிகளை செய்பவர்களை குழுக்களாகவும் இருந்தாலும் சரி, தனி நபர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குரிய தொழில் முயற்சியை பதிவு செய்து தக்க ரீதியான தொழில் முயற்சியாளர்களாக அடையாளப்படுத்தி வருகின்றேன்.
இதேவேளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு வாழ்வாதார முயற்சிகளை வழங்கி வந்தாலும் அத்தகைய வாழ்வாதார முயற்சிகள் பயன் கொடுக்கின்றனவா? என்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்களுடைய வாழ்வாதர முயற்சிகள் முறையான பலனை வழங்காத நிலையில் உள்ளது. இவை தொடர்பில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இதன் மூலமே வாழ்வாதார முயற்சிகள் பலன் உடையவனவாக மாற்ற முடியும்.” என்றார்.