
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலைச் பச்சிளம்சிறுமி ரெஜினா கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.இந்த மிலேசத்தனமான படுகொலை சம்பந்தமாக கருத்துக் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-
வடகிழக்கு யுத்தத்தினால் சின்னாபின்னமாக அழிக்கப்பட்டு, எமது தமிழ்மக்கள் பாரியதொரு பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நெருக்கடி மத்தியில் எமது தமிழ் சகோதரிகள் வன்கொடுமை செய்யப்பட்டு அவர்களின் உடலங்களை வீசி வருகின்றார்கள்.இது ஒட்டுமொத்த தமிழர்களை ஆத்திரப்படுத்தும் செயற்பாடாகும்.கிரிசாந்தி படுகொலை முதல் வித்தியா,சேயா என்று சென்று கொண்டிருக்கையில் அவை நிறுத்தப்படாமல் இன்று ரெஜினா வரையும் சென்று இருக்கின்றது.இது தமிழ்மக்களை மையப்படுத்தி கட்டவிழ்க்கப்பட்ட வன்கொடுமையாகும்.யாராக இருந்தாலும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகளும்,தீர்வுகளும் இல்லாமல் செல்லுகின்றது.
இந்தியாவில் பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான வன்கொடுமைகளை விசாரிக்க தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அங்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு தண்டனைகளும்,தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றது.ஆனால் எமது நாட்டில் பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு தண்டனைகளையும்,தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு மாவட்டங்கள்தோறும் நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை.அதனால்தான் பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான வன்கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றது.இவைகளை விசாரித்து உரியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு ஆட்சிக்குவரும் அரசாங்கம் மாவட்டம்தோறும் நீதிமன்றங்கள் அமைத்துக்கொடுக்க வேண்டும்.இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமாக வன்கொடுமைகளை விசாரிப்பதற்கு மாவட்டம்தோறும் பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான நீதிமன்றங்களை நிறுவிக்கொடுக்க வேண்டும்.
இன்று நாட்டிலே பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான குற்றச்செயல்கள்,வன்கொடுமைகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் விசாரணை செய்வதற்கு பொதுவான நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றது.இதனால் சிறுவர்கள்,பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகள் துரிதமாக விசாரிக்காமல் காலகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றதே தவிர பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு சுடச்சுட தீர்வுகள்,தீர்ப்புக்கள் நீதிமன்றத்தால் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை.எனவே சட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமானதாகும்.சட்டத்தை அவமதித்து வன்கொடுமைகள் செய்தவர்களுக்கு சரியான தண்டணை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.