பெண்கள் கவரிங் நகைகளை அணிய வேண்டும்! முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

290

 12644872_1123871167623025_5912417491395399174_n

நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பெண்கள் களவுகளை தவிர்க்கும் முகமாக கவரிங் நகைகளை அணிய முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்திலான பொலிஸ் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கந்தனை தரிசிக்கச் செல்லும் சில பெண்கள் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களைப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு போகின்றார்கள்.

இவர்களை மையமாக வைத்தே களவில் ஈடுபடும் கும்பல்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் போலி கவரிங் நகைகளைப் போட்டுக்கொள்ள அவர்கள் முன்வருவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE