பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து சிமோனா ஹெலப் விலகல்!

99
முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரோமேனியாவின் சிமோனா ஹெலப், பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முன்னணி வீராங்கனையான சிமோனா ஹெலப், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக நெதர்லாந்தின் முன்னணி வீராங்கனையான கிகி பெர்டென்ஸ், இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர், சிங்கப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) |ஆரம்பமாகி எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE