பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கல் – டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைக்கு வெற்றி

300

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை 26.01.2016 அன்று மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனைப்படைத்துள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனக்கு வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த இப்பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்க்கு ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் இப்பெண்ணின் வயிற்றில் பாரிய கல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு 26.01.2016 அன்று இவர்க்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறுவை சிகிச்சைக்குட்படுத்திய பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ மதிக்கதக்க கல் ஒன்று அறுவை சிகிச்சையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சையின் ஊடாக வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறான அறுவை சிகிச்சையின் ஊடாக பாரிய கல் எடுத்திருப்பது வைத்தியசாலைக்கு சாதனையாகும்.

அதேவேளை சிகிச்சைக்குட்படுத்திய பெண் உயிருடன் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பாரிய வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிரி தெரிவித்தார். (க.கிஷாந்தன்)

2c502ca5-d5b9-4b26-a8a3-0b2c7bfa3954 8ce086f5-5978-4ec2-8ac0-5172efc0a189 39bc00e3-c59f-4c31-8db0-37bfa69317ac 757e5a67-d443-413f-bf65-2d355d3616cd 898060b6-5f08-413f-8034-cb09510a054b

SHARE