பெண்ணிற்கு 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

136

ரஷ்ய நாட்டில் ராஜ துரோகம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ரஷ்யாவிற்கும் அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு கடந்த 2008-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் சூழும் அபாயமும் ஏற்பட்டது.

இந்நிலையில், இதே ஆண்டு ரஷ்யாவில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது.

இக்காட்சியை கண்ட Oxana Sevastidi(46) என்ற பெண் ஜோர்ஜியாவில் உள்ள தனது தோழி ஒருவருக்கு அவசர செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் ‘உங்கள் நாட்டின் மீது போர் தொடக்க பயங்கர ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் வெளியே தெரிந்ததை தொடர்ந்து தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்த வழக்கில் அவர் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும், பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து பெண் ஜனாதிபதியான விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு விளாடிமிர் புடின் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பொதுமக்களின் நலனிற்காக பெண் இதுபோன்ற குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE