இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண் ஒருவரை காப்பாற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காரின் உள்ளே சிக்கி கொண்ட பெண் வெளியே வரமுடியாமல் பரிதவிக்கிறார்.
சில நிமிடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வரும் பெண்ணை நீரின் வேகத்தையும் கூட பொருட்படுத்தாது நான்கு பேர் சேர்ந்து மனித சங்கிலி அமைத்து காப்பாற்றியுள்ளனர். இதுவரையில் கனமழைக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.