பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை திருடி தனது காதலிக்கு பரிசளித்த பிக்கு !

231

பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, காதலிக்கு பரிசளித்ததாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல், ரிதிகம பொலிஸார் இந்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

குறித்த பிக்கு சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூடப்பட்டு வரும் விகாரைகளை திறப்பதாக கூறி, நாட்டில் உள்ள பல விகாரைகளில் வசித்து வந்துள்ள இந்த பிக்கு, கிறிபத்கல்ல கந்தேகம விகாரைக்கு சில மாதங்களுக்கு முன் வந்து தங்கியுள்ளார்.

விகாரைக்கு பங்களிப்பு செய்து வரும் பெண்ணொருவர், இந்த பிக்குவுக்கு தானம் வழங்கி, வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி இந்த பிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பிக்குவை வரவேற்க வெற்றிலையை பறிக்க வீட்டின் பின்புறம் பெண் சென்றுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அறைக்கு புகுந்த பிக்கு, அங்கு அலுமாரியில் திறந்து அதில் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திருடி அதனை காவி உடைக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிக்கு கந்தேகம விகாரையில் இருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த தங்க ஆபரணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தேடிப்பார்த்துள்ளார். அது அங்கு இருக்கவில்லை.

இதனையடுத்து பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபரான பிக்கு கிராமவாசிகளிடம் தொடர்பு கொண்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், மல்கொல்ல என்ற பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள விகாரையில் மறைந்திருந்த குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

பிக்குவிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை மாத்தளை நாவுல பிரதேசத்தில் வசித்து வரும் தனது காதலிக்கு பரிசளித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து 52 வயதான பிக்குவின் காதலியான பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரிடம் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளனர்.

SHARE