பெண்ணொருவரை மோதிவிட்டு தலைமறைவாகிய இளைஞருக்கு வழங்கப்பட்ட உத்தரவு

179

திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் வீதியின் ஓரமாக சென்று கொண்டிருந்த பெண்ணை மோதிவிட்டு தலைமறைவாகிய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இளைஞரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

EP UD 8357 எனும் இலக்கமுடைய மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் பெண்ணொருவரை மோதிவிட்டு, மோட்டார்சைக்கிளை விபத்து இடம்பெற்ற இடத்தில் கைவிட்டு தப்பியோடியிருந்த நிலையில் நேற்றிரவு நிலாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாம்பல்தீவு, கோணேஷபுரி பகுதியை சேர்ந்த சிவஞானம் தமிழ்ச்செல்வன் (18 வயது) எனும் இளைஞரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

SHARE